சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, உருவாக உள்ளதாக 2022ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட படம் 'வாடிவாசல்'. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
பலருக்கும் எழுந்த சந்தேகத்துக்கிடையில் இந்த வருடப் பொங்கல் சமயத்தில் வெற்றிமாறன், சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து 'அகிலம் ஆராதிக்க 'வாடிவாசல்' திறக்கிறது,' என்ற அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு.
அதன்பின் மார்ச் மாதத்தில் வெற்றிமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
இப்போது 'வாடிவாசல்' படம் டிராப் ஆகிறது என மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிக்கும் வரை எதுவும் உண்மையில்லை என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.