லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‛ரெட்ரோ' படம் வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பங்கேற்று வருகிறார் சூர்யா. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சூர்யா, ரெட்ரோ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய கதையில் உருவாகி இருக்கிறது என்று பேசியவர், தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் தனது 45வது படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
வருகிற மே மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ள சூர்யா, ரெட்ரோ படம் வெளியாகும் அதே மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நானியின் ‛ஹிட் -3' படமும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்த அறிவிப்பு மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் ‛வாடிவாசல்' மீண்டும் தள்ளிப் போவது தெரிய வந்துள்ளது.