லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக இருந்து அதன்பிறகு ஹீரோவாகி விட்ட சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவான சூரியும் தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார். அதேசமயம் யோகி பாபு காமெடியனாக நடித்துக் கொண்டே அவ்வப்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்', சூரி நாயகனாக நடித்துள்ள ‛மாமன்' மற்றும் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‛ஜோரா கைய தட்டுங்க' என்ற மூன்று படங்களும் வருகிற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த போட்டியில் ஜெயிக்க போவது சந்தானமா? சூரியா? யோகி பாபுவா? என்கிற எதிர்ப்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.