‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

‛நாயகன்' படத்தில் முதன்முறையாக இணைந்த கமலும், மணிரத்னமும் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தற்போது ‛தக்லைப்' படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவும் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். ஜூன் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தக்லைப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். அந்தவகையில், மணிரத்னம் இயக்கத்தில் ‛செக்கச் சிவந்த வானம், தக்லைப்' என்ற இரண்டு படங்களில் நடித்துள்ள சிம்பு, மூன்றாவது முறையாகவும் நடிக்கப்போகிறார். தற்போது கைவசமுள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு மணிரத்னம் படத்தில் அவர் இணைவார் எனத் தெரிய வந்துள்ளது.