விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் | கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் |

அஜித்குமார் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த திரைப்படம் முதல் இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 172 கோடி வசூலித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 8 கோடிக்கு வசூல் செய்துள்ளது, இதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 180 கோடியை கடந்து தமிழக திரைப்பட வசூல் வரலாற்றில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் அதிக வசூல் செய்த வரலாற்றில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மட்டுமே சுமார் 200 கோடியை கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள நாட்களில் இந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் 'ஜெயிலர்' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் விடுமுறை நாட்கள் இருப்பதால் ஜெயிலர் சாதனையை முறியடிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.




