மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
கோமளா ஹரி பிக்சர்ஸ், ஒன் ட்ராப் ஓஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், நரேந்திர குமார், லோகேம் நேதாஜி ஆகியோர் தயாரித்துள்ள படம் "ஜென்டில்வுமன்' மார்ச் 7ம் தேதி திரைக்கு வருகிறது. புதுமுகம் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் நடித்துள்ளனர். கோவிவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் ஜோஸ்வா பேசியதாவது : சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. கோவிந்த் வசந்தாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.