தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
அழகும் திறமையும் இருந்தாலும், வாழ்க்கையின் புறச்சூழலை சந்திக்க முடியாமல் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை பிரித்து அறிய முடியாமல் காணாமல் போன நடிகைகள், மரணித்த நடிகைகள் தமிழில் அதிகம் உண்டு. சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி அறியப்பட்டவர்கள். ஆனால் அறியப்படாத நடிகைகள் நிறைய உண்டு அவர்களின் ஒருவர் தான் நிஷா நூர்.
நாகப்பட்டினத்தில் வாழ்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து பல அவமானங்கள், துன்பங்களை சந்தித்து கடைசியாக 1980ல் வெளியான 'மங்கள நாயகி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து இளமை கோலம், எனக்காக காத்திரு, டிக் டிக் டிக், அவள் சுமங்கலி தான், ஸ்ரீ ராகவேந்திரா, கல்யாண அகதிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில், 1992ம் ஆண்டு வெளியான 'அவள் ஒரு வசந்தம்' படத்தில் நடித்திருந்தார்.
அவர் பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களிலேயே நடித்தார். அவருக்கு வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே வெளியேறினார். ஒரு தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவரும் அவரை ஏமாற்றிவிட்டார். இதனால் அவர் சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்பிறகு அவரைப் பற்றி எந்த தகவல்களும் இல்லை. அவர் நாகூர் தர்காவில் பிச்சை எடுத்து வாழ்ந்ததாகவும் , நோயுற்று மயங்கி கிடந்த அவரை ஒரு இஸ்லாமிய அமைப்பு மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. சில நாட்களுக்கு பிறகு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது நடந்தது 2007ம் ஆண்டில்.
நிஷா நூர் பல திரைப்படங்களில் நடித்ததும், அவரை இஸ்லாமிய அமைப்பினர் நாகூர் தர்காவில் மீட்டது மட்டுமே உண்மையான தகவல். மற்றவை அந்தந்த காலத்தில் உருவான யூகத்தின் அடிப்படையிலான தகவல்களாகும்.