சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‛வாடிவாசல்' படம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பின்னர் கிடப்பில் போட்டு விட்டார்கள். தற்போது ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஆண்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், வாடிவாசல் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியானதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன்'' என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.