கார்த்தியின் சர்தார்- 2 எப்போது ரிலீஸ்? | மீண்டும் அஜித் படத்தில் சிம்ரன் | காலில் அடிபட்ட நடிகருக்காக லூசிபர் படத்தில் மாற்றம் செய்த பிரித்விராஜ் | அடுத்த சுழலுக்கு தயாரா | தனுஷ் பெயரில் மோசடி : தயாரிப்பு தரப்பு விளக்கம் | ஜோடியாக நடித்த உன்னி முகுந்தனின் 'மார்கோ' படத்தை பார்க்காதது ஏன் ? ; நிகிலா விமல் | ஐந்து வெளிநாட்டு மொழிகளில் ஓடிடியில் வெளியான புஷ்பா 2 | புலி முருகனுக்கு வாங்கிய வங்கிக்கடனை அடைக்கவில்லையா ? ; தயாரிப்பாளர் பதிலடி | 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் பார்த்திபன் | டீசலில் துள்ளல் போட வைக்கும் சிம்பு பாடிய பாடல் |
கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் நேற்று அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், "அமரன் படம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து, சரியான மரியாதையும் தந்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்கு ரொம்ப நன்றி கமல் சார். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கியது மிகவும் குறைவான படங்களில் தான். சில நேரங்களில் படம் வெளியாகும் போது கொடுத்த சம்பளத்திலிருந்து பாதியை வாங்கிக் கொண்டும் சென்றுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.