சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

ராஜேஸ்வர் காளி சாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் இரண்டாவது வாரத்தில் அஜித்தின் ‛விடாமுயற்சி' படம் வெளியானபோது குடும்பஸ்தன் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்தது. ஆனால், விடாமுயற்சி எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் குடும்பஸ்தன் படத்திற்கு தியேட்டர்களை சற்று உயர்த்தியுள்ளனர்.
இப்போது நான்கு வாரங்களை எட்டவுள்ள நிலையில் குடும்பஸ்தன் படம் தமிழகத்தில் சுமார் ரூ. 25 கோடி வசூலை எட்டியுள்ளதாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதுதான் மணிகண்டன் படங்களில் அதிக வசூலித்த படமாக அமைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.