காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
நடுத்தர குடும்பத்தை படம் பிடித்து காட்டிய குடும்பஸ்தன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அதே பாணியில் உருவாகும் படம் '3பிஎச்சே' (3 பெட்ரூம் கொண்ட வீடு). இன்றைக்கு நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை மையப்படுத்தி பெரிய வியாபாரம் நடக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைதான் இந்த '3 பிஎச்கே'.
இந்த படம் சித்தார்த்தின் 40வது படம். அவருடன் சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். '8 தோட்டாக்கள்' மற்றும் 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.