என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஆந்திராவில் உள்ள பெந்தபாடு என்ற ஊரில் செல்வாக்காக இருந்த தோண்டாபுரம் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் புஷ்பவல்லி. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.வி.ரங்காச்சாரி என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் செட்டிலானார். முறையாக நடனம் கற்றிருந்த புஷ்பவல்லிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.
1936ம் ஆண்டில் 'சம்பூர்ண இராமாயணம்' என்ற தெலுங்குப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தார். இவரது திறமையைக் கண்ட இயக்குநர் சி. புல்லையா தனது 'சல் மோகனரங்கா'படத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து மோகினி பஸ்மாசுரா, வரவிக்ரயம் தசாவதாரம், மாலதி மாதவம், தாராசசாங்கம் சூடாமணி, சத்தியபாமா போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
1944ம் ஆண்டு வெளிவந்த 'தாசி அபராஞ்சி'என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். யாரும் நடிக்கத் தயங்கிய தாசி வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழில் புகழ்பெற்றார். அடுத்த படமான 'மிஸ் மாலினி'யில் நடித்தார். ஏற்கெனவே திருமணம் செய்து கணவனை பிரிந்து வாழ்ந்த புஷ்பவல்லி உடன் நடித்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வலையில் விழுந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே ரேகா, ராதா என்ற இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.
சக்ரதாரி, சம்சாரம், பெற்ற மனம், சங்கிலித்தேவன், கை கொடுத்த தெய்வம் படங்களில் நடித்தார். பின்னர் ஜெமினி கணேசனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தன் மகள் ரேகாவை நடிகையாக தயார் படுத்தினார். அவர்தான் பாலிவுட்டின் சிறந்த ஆளுமையான நடிகையான ரேகா.