'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
எம்.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து இயக்கி உள்ள படம் 'காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்'. சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி , ஐஸ்வர்யா பாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, அகல்யா உள்பட நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார், து.மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் கவுரி சங்கர் படத்தை பற்றி கூறியதாவது: இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பது தான் அது. புரிந்த காதல் சுகமானது. புரியாத காதல் சுமையானது. மூன்றாவது புரியாத காதல் முடிவில்லாதது. இதற்காக ஒவ்வொரு காதலுக்கும் ஒவ்வொரு ஜோடிகளை வைத்திருக்கிறேன். இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்களா? அதையே தொடர்கிறார்களா? என்பதை சுவையான திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறேன். என்றார்.