ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
யாஷோ எண்டர்டெயின்மெண்ட் சார்பில், எம்.சத்யா தயாரித்துள்ள படம் 'கருப்பு பல்சர்'. இயக்குநர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளனர். இவர்களுடன், மன்சூர் அலிகான், கலையரசன் , சரவணன் சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்பராஜ் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் முரளி கிரிஷ் கூறியதாவது: மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
'லப்பர் பந்து' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார் தினேஷ். இப்படம் மக்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக இருக்கும். 'பொல்லவாதவன்' பட கருப்பு பல்சர், ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த இரண்டும் தான் இப்படத்தின் கரு உருவாகக் காரணமாக இருந்தது.
மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டைப் படத்தில் லைவ்வாக காட்டியுள்ளோம். இப்படத்தின் கதை கேட்டு உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் தினேஷ். இந்தப்படத்தில் அவரின் உழைப்பு அபாரமானது. இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டில் உண்மையாகவே மாடுகளைப் பிடித்தார். அப்போது அவருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் நடித்துத் தந்தார். சென்னை இளைஞனாகவும் கலக்கியிருக்கிறார். சென்னை, மதுரையில் 28 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். லப்பர் பந்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப்படம் இருக்கும். என்றார்.