இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |

அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் தினேஷ். அதன்பிறகு குக்கூ , திருடன் போலீஸ், விசாரணை, கபாலி, உள்குத்து என பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், கடந்த ஆண்டில் வெளியான லப்பர் பந்து படம் ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து அட்டக்கத்தியை தூக்கி விட்டு கெத்து தினேஷ் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது அவர் தண்டகாரண்யம் என்ற படத்தில் நடித்துள்ளார். தினேஷ் உடன் கலையரசன், ரித்விகா, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லப்பர் பந்து படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நூறு கதைகள் கேட்டுள்ளேன். என்றாலும் நான் எதிர்பார்ப்பது போன்று மாறுபட்ட கதைகள் அமையவில்லை. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் தினேஷ்.




