சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

‛அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் தினேஷ். தொடர்ந்து தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தின் வெற்றி அவரை அட்டகத்தி தினேஷ் என்பதை கெத்து தினேஷ் ஆக மாற்றியது. அந்தளவுக்கு அந்த படத்தில் கெத்து வேடத்தில் யதார்த்தமாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'கருப்பு பல்சர்'. இதை முரளி க்ரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது என முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.