சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு சில படங்களை இயக்கி இருந்தாலும் அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளிவந்த ' லக்கி பாஸ்கர்' படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. வெங்கி அட்லூரி அடுத்த படம் யாருடன் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
சமீபத்தில் வெங்கி அட்லூரி மீண்டும் நடிகர் தனுஷை வைத்து தான் அடுத்த படத்தை இயக்க போகிறார் என தகவல் வந்தது, இது கிட்டத்தட்ட உறுதியும் ஆகி உள்ளது. தற்போது இப்படத்திற்கு 'ஹானஸ்ட்ராஜ்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதே தலைப்பில் 1994ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ஒரு படம் வெளியாகி வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.