சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான படம் 'மத கஜ ராஜா'. அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், மனோபாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக வெளியாகி உள்ளது. இந்த பொங்லுக்கு வெளியான படங்களில் இந்த படம் தான் நல்ல வசூலை கொடுத்து வருகிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த மேடையில் பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசினார் விஷால். "ஒரு நாள் செய்தித்தாளில் ஏதோ ஒரு விஷயம் வரும், மறுநாள் மறந்து விடுவார்கள். ஆனால் விஷாலின் நடுக்கம் உலக அளவில் ரீச் ஆகி விஷால் நல்லா இருக்கணும், விஷால் மீண்டு வரவேண்டும், விஷாலுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே கிடையாது என மருத்துவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் இன்னும் பல வெளிநாடுகளில் இருந்து பலரும் தொடர்ந்து அன்பாக விசாரித்தார்கள். அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிந்தபோது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், நேசிக்காதவர்கள் கூட என்னை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தேன்.
12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்த படமாக தான் இருக்கும். மை டியர் லவ்வரு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனி நடத்தும் கான்செர்ட் நிகழ்ச்சியில் அந்த பாடலை பாட அவர் அழைத்துள்ளார். இது என் முதல் கான்செர்ட். இது கனவிலும் நினைத்திராத ஒன்று. ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன்" என்றார்.