2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா உடன் ‛ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தென்னிந்திய சினிமா பல விஷயங்களை பகிர்ந்தார்.
ரெட்ரோ பட வாய்ப்பு எப்படி கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது, "ரெட்ரோ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் இதுவரை நான் நடித்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். ராதே ஷ்யாம் படத்தில் நான் நடித்த இரண்டு எமொசனல் காட்சிகள் தான் இப்படத்தில் எனக்கான வாய்ப்பை பெற்று தந்தது. இந்த தகவலை கார்த்திக் சுப்பராஜ் தான் என்னிடம் தெரிவித்தார்" என்றார்.