மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
மதுவின் தீமையை விளக்கி சமீபத்தில் 'பாட்டல் ராதா' என்ற படம் வெளிவந்தது. அதற்கு முன்பு 'அப்பா வேணாம்பா', 'கிளாஸ்மெட்', 'மதுபானகடை' உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன. ஆனால் மதுவின் தீமையை விளக்கி முழுநீள படமாக வெளிவந்த முதல் படம் 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்'. இந்த படத்தை கடலூர் புருஷோத்தமன் இயக்கினார். தேங்காய் சீனிவாசன் நாயகனாகவும், கே.ஆர்.விஜயா நயாகியாகவும் நடித்தார்கள். ராஜவர்த்தினி பிக்சர்ஸ் தயாரித்தது.
இந்த படத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய எம்ஜிஆர். “மது அரக்கனை ஒழிக்க இதுபோன்ற திரைப்படங்கள் அவசியம். இந்த நல்ல முயற்சிக்காகவே இந்த படத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இந்த படம் மாநில விருதை மட்டுல்ல மத்திய அரசின் விருதையும் பெற வேண்டும்” என்றார்.
படம் வெளியாகி சுமாரன வரவேற்பைத்தான் பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசு விருதை பெற்றது.