பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

அந்த காலத்தில் புகழ்பெற்ற வசனகர்த்தாக்கள் என்றால், இளங்கோ, கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் காலத்தில் இவர்களை போன்றே நட்சத்திர வசனகர்த்தாவாக வலம் வந்தவர் கிருஷ்ணசாமி. அதோடு எம்ஜிஆர், சிவாஜிக்கு பிடித்த அவர்களது ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் இருந்தார், எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும்போதே இவர் தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறிவிடுவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், குங்குமம், கர்ணன், தங்க சுரங்கம், சொர்க்கம், தர்மம் எங்கே, பொன்னுஞ்சல், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி உள்ளிட்ட பல சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதினார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், பணம் படைத்தவன், எங்க வீட்டு பிள்ளை, பறக்கும் பாவை உள்ளிட்ட பல எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்.
எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதை போல் பின்னாளில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த 'என்னைப்போல் ஒருவன்' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். வசனங்களுக்காகவே புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் படங்களுக்கு வசனம் எழுதியவரும் இவரே.
தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி, த.க.கிருஷ்ணசாமி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். 1950களில் தொடங்கி நாடங்களுக்கு வசனம் எழுதி பின்னர் திரைப்படங்களுக்கு எழுதினார். சினிமாவுக்கு முன்னதாக சக்தி நாடக சபா என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். இந்த குழுவின் ஆஸ்தான நடிகராக இருந்தார் சிவாஜி.