பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா |
நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா ஆகியவற்றில் எந்த புதுப் படம் வெளியானாலும் நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி ஆகியவை நடப்பது வழக்கம்.
கடந்த வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமான படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அங்கு நள்ளிரவு காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. சங்கராந்தியின் போது அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால், தெலுங்கானாவில் அதிகாலை காட்சி, டிக்கெட் கட்டண உயர்வு இனிமேல் கிடையாது.
எனவே, ஆந்திர மாநிலத்தில் தங்கள் 'தண்டேல்' படத்திற்கு 50 ரூபாய் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் விண்ணப்பித்துள்ளார். அரசு தரப்பில் இன்னும் அனுமதி ஆணை வழங்கப்படவில்லை. அதனால், ஆந்திராவில் இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைத்தாலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
டிக்கெட் கட்டண உயர்வு, சிறப்புக் காட்சிகள் இல்லாத காரணத்தால் தெலுங்குப் படங்களுக்கான தெலுங்கானா மாநில வசூல் குறைந்துவிடும்.