சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

'பிக் பாஸ்' 6வது சீசன் மூலம் புகழ் பெற்றவர் ஆயிஷா. ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இதுதவிர 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியுள்ளார்.
அப்ரிஞ்ச் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜாபர் இயக்கும் இந்தப் படத்தில் விடாமுயற்சி கணேஷ் சரவணன் நாயகனாக நடிக்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சதீஷ்குமார் துரை ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குனர் ஜாபர் கூறியது: இது காமெடி திரில்லர் ஜார்னரில் உருவாகும் படம். 2018ம் ஆண்டு கல்லூரி முடித்த காதலர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் பிரிகிறார்கள். இப்போது அவர்கள் வேறு ஒரு ஜோடியுடன் திருமணமாகி வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியொரு சூழலில் இவர்கள் ஓரிடத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள். அது ஒரு அறை. அந்த அறை திடீரென லாக் ஆகிவிடுகிறது. அந்த சமயத்தில் உறவினர்கள் பலரும் அங்கு வந்துவிட, கதவு திறக்கப்பட்டு இவர்கள் வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற கான்செப்ட்டில் படம் செல்லும். கணேஷ் சரவணனின் மனைவியாக ஆயிஷா நடிக்கிறார்” என்றார்.




