பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா |
1944ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான படம் 'பத்ருஹரி'. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'பத்ருஹரி' என்ற மன்னரின் கதை. நேர்மையாக ஆட்சி செய்த இந்த மன்னன் சமஸ்கிருதத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியவர். அதே நேரத்தில் பெண்பித்தராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு 300 மனைவிகள் இருந்தார்கள். அதில் கடைசி மனைவிதான் படத்தின் ஹீரோயின் ஜெயம்மா. மன்னராக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். அவரது சகோதரர் விக்ரமாதித்தனாக ஜி.பட்டு அய்யர் நடித்திருந்தார். அவரது மூத்த மருமகன் அஸ்வத்தாமனாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருந்தார்.
இவர்கள் தவிர வி.என்.ஜானகி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், நாகலட்சுமி, கல்யாணி, 'ஆழ்வார்' குப்புசாமி, 'புலிமூட்டை' ராமசாமி, இ.கிருஷ்ணமூர்த்திபா குஞ்சிதா மற்றும் எம்.கிருஷ்ணமூர்த்தி குஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில்தான் முதன் முறையாக ஆண் நடிகர்களும், பெண் நடிகைகளும் மிகவும் நெருக்கமாக தொட்டு பேசி, கட்டிப்பிடித்து நடித்திருந்தார்கள். அதோடு படத்தின் நாயகியாக நடித்த ஜெயம்மா கன்னடத்தில் முன்னணி நடிகை அவர் நல்ல கேரக்டர்களிலேயே நடித்தார். ஆனால் இந்த படத்தில் மன்னரை மயக்கும் விலைமாதுவாக நடித்தார். காமெடி நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இதில் வில்லன். மன்னருக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பவராக நடித்தார். அதோடு மன்னரின் மனைவி ஜெயம்மாவுடம் கள்ள தொடர்பு வைத்திருப்பவராகவும் நடித்தார்.
நெருக்கமான காட்சிகள், ஜெயம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதுவே படத்தை வெற்றி பெறவும் வைத்தது.