திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் |

2024ம் ஆண்டு வெளியான தமிழ் சினிமா பாடல்களில் மிகக் குறைந்த அளவிலான பாடல்களே யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. கடந்த ஆண்டில் நிறைய சூப்பர் ஹிட் பாடல்கள் வராமல் இசை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
'அரண்மனை 4' படத்தில் இடம் பெற்ற 'அச்சோ அச்சோ', 'ராயன்' படத்தில் இடம் பெற்ற 'வாட்டர் பாக்கெட்', 'வேட்டையன்' படத்தில் இடம் பெற்ற 'மனசிலாயோ' ஆகிய மூன்றே பாடல்கள் மட்டுமே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தன.
தற்போது 'தங்கலான்' படத்தில் இடம் பெற்ற 'மினிக்கி மினிக்கி' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஜிவியின் இசையில் கடந்த ஆண்டில் வெளிவந்த பாடல்களில் 'தங்கலான்' படம் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் பாடல் வெளியான போதே சூப்பர் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட்டது.
ஜிவியின் இசையில் இந்த மாதம் 21ம் தேதி வெளிவர உள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் இடம் பெற்றுள்ள 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் ஏற்கெனவே 145 மில்லியன் பார்வைகளைக் கடந்து சூப்பர் ஹிட்டாகி உள்ளது. அதற்கடுத்து 'தங்கலான்' பாடலான 'மினிக்கி' இப்போது 100 மில்லியனைக் கடந்துள்ளது.