'18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் |
மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஏமாற்றம் அளித்த படம் 'குமாரி'. இந்த படத்தை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனது. நீண்டு கொண்டே செல்லும் கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையால் படம் தோல்வி அடைந்தது.
இந்த படத்தில் எம்ஜிஆருடன், மாதுரி தேவி, ஸ்ரீரஞ்சனி, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். துரைராஜ், கே.எஸ். அங்கமுத்து, சி.டி. ராஜகாந்தம் மற்றும் புலிமூட்டை' ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். ஆர். பத்மநாபன் இயக்கினார். காட்டுக்குள் தன்னால் காப்பாற்றப்பட்ட ஒரு இளவரசியை மணப்பதற்காக அவளின் அரண்மனைக்கே சென்று அதை சாதிக்கும் ஒரு இளைஞனின் கதை. கே.வி.மகாதேவன் இசையமைத்தார், டி. மார்கோனி ஒளிப்பதிவு செய்தார்.