மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‛காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகியுள்ளது. இது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகியுள்ளது. காந்தாரா சாப்டர் 1 இவ்வருட அக்டோபர் 2ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. இப்போது டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி தளம் ரூ. 125 கோடிக்கு கைபற்றியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். முன்னதாக இதன் முதல்பாகம் உருவானபோது அந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க பலர் தயங்கினர். பலர் குறைந்த விலைக்கு கேட்டனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ரூ.125 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.




