மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
2025ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மட்டும் 26 படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 'மத கஜ ராஜா' படம் மட்டும் 50 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. 'குடும்பஸ்தன்' படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது என பாக்ஸ் ஆபீஸ் தகவல். 'காதலிக்க நேரமில்லை' படம் சுமாரான வசூலைப் பெற்றுள்ளது. 26 படங்களில் 3 படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் வசூலைத் தந்ததுள்ளது என்பது அதிர்ச்சிதான்.
ஜனவரி மாதத்தைப் போலவே பிப்ரவரி மாதத்திலும் நிறைய படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் வருவதால் அன்றைய தினம் வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும், அதற்கடுத்த வாரமான பிப்ரவரி 14ம் தேதி 7 படங்கள் வரை வெளியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
“2 கே லவ் ஸ்டோரி, அது வாங்கினால் இது இலவசம், பேபி & பேபி, படவா, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை” ஆகிய படங்கள் அன்று வெளியாகின்றன. இதில் வேறு படங்கள் சேருமா அல்லது இருக்கும் படங்களில் சில விலகுமா என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும். இந்த தமிழ்ப் படங்களோடு 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' ஹாலிவுட் படம் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகிறது. தமிழ்ப் படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தைப் பார்க்கத்தான் இளம் ரசிகர்கள், குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள்.