'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் படங்களை தொடர்ந்து தற்போது சர்தார் - 2 படத்தை இயக்கி வருகிறார் பி. எஸ். மித்ரன். கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், சஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை அடுத்து பாகுபலி வில்லன் ராணா நடிப்பில் தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி , கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்குகிறார் மித்ரன். இப்படத்தை ராணாவே தயாரித்து நடிக்க உள்ளார். மேலும், ஏற்கனவே ஆரம்பம், பெங்களூரு நாட்கள், காடன், வேட்டையன் என பல தமிழ் படங்களில் ராணா நடித்திருக்கிறார்.