மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டேல்'.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்கள் 2018ல் குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்த போது தவறுதலாக பாகிஸ்தான் கடல் பகுதியில் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த சுஷ்மா சுவராஜ் கடும் முயற்சிகளுக்குப் பிறகு அவர்களை மீட்டு கொண்டு வந்தார். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் 'தண்டேல்' படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த மீனவர்களில் 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கித்தான் 'தண்டேல்' படம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
20 பக்க அளவிலான கதையைக் கொடுத்த இயக்குனர் சந்து அதை இரண்டரை மணி நேர உணர்வுபூர்மான படமாக எடுத்திருக்கிறார் என படத்தின் நாயகி சாய் பல்லவியும் இயக்குனரைப் பாராட்டியுள்ளார்.
காதலும், தேசப்பற்றும் கலந்த படமாக 'தண்டேல்' படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது.