புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
நானி, மிருணாள் தாக்கூர் மற்றும் பலர் நடிக்க சவுரிவ் இயக்கத்தில் 2023ல் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஹை நன்னா'. அப்படத்தைத் தங்களது 'பீமசேனா நளமகாராஜா' படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் புஷ்கர மல்லிகார்ஜுனய்யா என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் அவர் குற்றச்சாட்டை வைத்திருந்தாலும் இந்த காப்பி விவகாரம், தெலுங்கு, கன்னடத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் சமூக வலைத்தளங்களில் 'ஹை நன்னா' குழுவினரை 'டேக்' செய்து பதிவிட்டிருந்தாலும் அதற்கு யாரும் எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை.
'பீமசேனா நளமகாராஜா' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. கார்த்திக் சரகுர் இயக்கத்தில் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை கன்னடத்தின் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டியும் இணைந்து தயாரித்துள்ளார்.