நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. 'புஷ்பா 2' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் ஹிந்தியில் நடித்துள்ள 'சாவா' படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் வீல் சேரில் வந்து கலந்து கொண்டார் ராஷ்மிகா. சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஜிம்மில் அவரது காலில் காயம் அடைந்தார். அவரை ஏழு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இருந்தாலும் முக்கியமான படம் என்பதால் நிகழ்ச்சிகளில் வீல் சேரில் சென்று கலந்து கொள்கிறார்.
கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். படத்தின் நாயகன் விக்கி கவுஷல் அவரை வீல் சேரில் நேற்று அழைத்து வந்தார். அவரது கடமை உணர்ச்சியை ரசிகர்களும், படக்குழுவினரும் பாராட்டியுள்ளனர்.