மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் திருப்புமுனை படமான பராசக்தி வெளியாகி 72 ஆண்டுகளாகிறது. நாத்திக கருத்துக்களை பேசிய இந்த படம் இந்து தெய்வமாக 'பராசக்தி'யின் பெயரில் உருவானதுதான் முதல் ஆச்சரியம். இந்து பெண் கடவுள்களுக்கு தனித்தனி சக்திகள் உள்ளன. அனைத்து சக்தியும் உள்ள பெண் கடவுளாக பராசக்தி வணங்கப்படுகிறார். இதனால்தான் பாரதியார் பராசக்தியை நினைத்து நிறைய பாடல்களை பாடியுள்ளார்.
பராசக்தியின் மூலக் கதையை எழுதியவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரம். அவரது கதை தேவி நாடகக் குழுவினரால் நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. பராசக்தி திரைப்படம் ஆவதற்கு முன்பு புகழ்பெற்ற தலைப்பாக இருந்தது .
நாடகத்தைப் பார்த்த நேஷனல் பிக்சர்சின் பி.ஏ. பெருமாள் முதலியார் அதனைப் படமாக்க விரும்பினார். இதைப்பற்றி அவர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரிடம் கலந்தாலோசித்தபோது, ஏ.வி.எம். மற்றும் நேஷனல் பிக்சர்ஸ் இணைந்து படத்தைத் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
முதலில் ஏ.எஸ்.ஏ. சாமியைக் கொண்டு இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. பிறகு கிருஷ்ணன் - பஞ்சுவிடம் படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதியதன் மூலம் புகழ் பெற்றிருந்த கருணாநிதியிடம் திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
சிவாஜி கணேசன் நடித்திருந்த பல நாடகங்களைப் பார்த்திருந்த பெருமாள் முதலியார், அவரையே நாயகனாக ஒப்பந்தம் செய்தார். இவர்கள் தவிர, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் படத்தில் நடித்தனர்.
படப்பிடிப்பு துவங்கி, சில ஆயிரம் அடிகள் எடுக்கப்பட்ட பின் படத்தை போட்டுப்பார்த்த மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி கணேசனின் தோற்றமும் நடிப்பும் திருப்தி அளிக்கவில்லை. பெருமாள் முதலியாரை அழைத்து வேறு யாரையாவது அல்லது கே.ஆர். ராமசாமியை நாயகனாக வைத்து படத்தை எடுக்கலாம் என்றார். ஆனால், பெருமாள் முதலியார் ஏற்கவில்லை.
சிவாஜியின் ஒல்லியான தேகமே மெய்யப்ப செட்டியார் அதிருப்திக்கு காரணம் என்பதை புரிந்து கொண்ட பெருமாள் முதலியார் 6 மாதங்கள் வரை படத்தை நிறுத்தி வைத்து சிவாஜிக்கு நல்ல சாப்பாடு கொடுத்து எடையைக் கூட்டி அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கினார். பல தடைகளுடன் இரண்டு வருடங்களாக நடந்து வந்த படம் ஒரு வழியாக முடிந்தது.1952ஆம் ஆண்டு. அக்டோபர் 17ஆம் தேதி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.