எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. "சின்னக்குயில் சித்ரா' என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். உலகமெங்கும் மேடை கச்சேரிகளில் பாடி வந்த சித்ரா முதன் முறையாக தனது தனி இசை கச்சேரியை சென்னையில் நடத்துகிறார்.
'கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி குறித்து கே எஸ் சித்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ரூபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.
இன்றைய பாடல்களில் இசையின் சத்தம் அதிகமாக வார்த்தைகள் மற்றும் குறைவாகவும் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். காலத்திற்கு ஏற்ப இசையிலும் மாறுதல்கள் வரத்தான் செய்யும் அதை ஏற்றுக் கொண்டு நாம் பயணிக்க வேண்டும். அது குறித்து விமர்சனம் செய்ய வேண்டியது இல்லை. பல இளம் பாடகிகள் மிகத் திறமையாக பாடுகிறார்கள் அவர்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
யேசுதாஸ் அண்ணன் கரம் பிடித்து இந்த துறைக்கு வந்தேன். இளையராஜா என்னை ஆளாக்கினார். ரசிகர்கள் ஆதரவு தந்தார்கள். இன்றைய இளம் பாடகிகள் சினிமாவில் நடிப்பது போல நான் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். எனக்கும் ஒரு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை.
எல்லா பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பு தான் கொடுக்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்ற என்னத்தோடு தான் பாடுவேன். ஆனாலும் சில பாடல்கள் மக்களிடம் சரியாக சென்று சேராத போது அது வருத்தமாக இருக்கும். நான் பாடிய எல்லா பாடல்களையும் ஒரே மாதிரியாக தான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.