மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் தர்ஷன். இவரது தோழி நடிகை பவித்ரா கவுடா. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பவித்ரா கவுடாவிற்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேரை பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் பெங்களூரு உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக போலீஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. கைதான 7 பேருக்கும் கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கும், கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.