போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட் | சிகரெட் : ரசிகர்களுக்கு சூர்யாவின் வேண்டுகோள் | ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரம் கிடைக்காமல் போனது ஏன்: ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி : முன்பதிவு நிலவரம் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன தேவயானி |
2025ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு “மெட்ராஸ்காரன், வணங்கான், மத கஜ ராஜா, காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'தருணம்' படத்தை ஒரே நாளில் தியேட்டர்களிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.
மற்ற படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டும்தான் சொல்லிக் கொள்ளும்படியாக அனைத்து சென்டர்களிலும் ஏறக்குறைய ஹவுஸ்புல் என்ற நிலையில் தியேட்டர்களில் கடந்த ஒரு வாரமாக ஓடியுள்ளது. 'காதலிக்க நேரமில்லை' படத்திற்கு மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற சென்டர்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. 'வணங்கான்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் வசூல் இல்லை. 'மெட்ராஸ்காரன்' படம் வந்த சுவடு தெரியவில்லை. 'நேசிப்பாயா' படத்தை பெரிய அளவில் விளம்ரப்படுத்தவில்லை, இல்லையென்றால் சுமாராக ஓடியிருக்கும்.
அனைத்து படங்களில் 'மத கஜ ராஜா' படம் மட்டும் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 12 வருட பழைய படம் வெளிவந்து பொங்கல் வின்னர் ஆகியுள்ளது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் வருடம் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படம்தான் முதல் வெற்றிப் படமாக அமைந்தது. அதுபோல இந்த 2025ம் ஆண்டிலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் முதல் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.