நான் குடித்துக்கொண்டே இருப்பேன் : மிஷ்கின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் | டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'பாட்ஷா': தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | முதன் முறையாக தனி இசை கச்சேரி நடத்துகிறார் சித்ரா | பிளாஷ்பேக் : கே.பாக்யராஜை கொலைகாரனாக ஏற்காத ரசிகைகள் | பிளாஷ்பேக்: திரையில் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி | தேவயானியின் முதல் இயக்கத்திற்கு கிடைத்த விருது | பிளாஷ்பேக்: முழுமை பெற்ற “ராஜமுக்தி”.. முடிவுக்கு வந்த எம் கே டியின் திரைப்பயணம்.. | ஒரு படம் ஓடுவதற்குள் கோடியில் சம்பளம் பேசும் லவ் டுடே நடிகர் | விஜய் 70 படத்தை இயக்கப் போகும் வெங்கட் பிரபு? | லப்பர்பந்து மூலம் 'சிக்ஸர்': ஆஹா... ஸ்வாசிகா! |
பான் இந்தியா படங்கள் பிரபலமான பிறகு ஒரு மொழியில் பிரபலமாக உள்ள இயக்குனர்கள் வேறு மொழிகளில் படங்களை இயக்குவதும் நடந்து வருகிறது. அப்படி தமிழில் முன்னணியில் உள்ள சில இயக்குனர்கள் தெலுங்குப் பக்கம் சென்று அங்கு நேரடிப் படங்களையும் இயக்கி வருகிறார்கள். ஆனால், அவர்களால் அங்கு வெற்றி பெற முடியாமல் தோல்விப் படங்களைத் தந்து போன வேகத்திலேயே திரும்பி வந்துவிடுகிறார்கள்.
கடந்த சில வருடங்களில் அங்கு படங்களை இயக்கச் சென்ற தமிழ் இயக்குனர்கள் அவர்கள் தோற்பதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள ஹீரோக்களுக்கும் தோல்விகளைத் தருவதால் அந்த ஹீரோக்களின் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளாகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டார். அதனால், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாரான 'ஸ்பைடர்' படத்தில் நடித்தார். 2017ல் வெளியான அப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் தோல்விப் படமாக அமைந்தது.
'அரிமா நம்பி, இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தெலுங்கின் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கில் 'நோட்டா' படத்தை இயக்கினார். தெலுங்கில் 'கீதா கோவிந்தம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக வந்த படம் இரண்டு மொழிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு மிகப் பெரிய வெற்றிக்கு இன்னும் தடுமாறி வருகிறார் விஜய் தேவரகொன்டா.
தமிழில் 'புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிக்க 'மைக்கேல்' என்ற படத்தை இயக்கினார். அதிரடி ஆக்ஷன் படமாக வந்தாலும் படம் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவியது.
தமிழில் 'ரன், சண்டக்கோழி' உள்ளிட்ட படங்களை இயக்கிய லிங்குசாமி தெலுங்கின் இளம் ஹீரோவான ராம் பொத்தினேனி நடிக்க தமிழ், தெலுங்கில் 'தி வாரியர்' என்ற படத்தை இயக்கினார். சென்னையில் படித்து வளர்ந்ததால் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு நடித்தார். ஆனால், அவருடைய ஆசை நிராசையாகிப் போனது. இரண்டு மொழிகளிலுமே படம் தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே தோல்வியடைந்தது.
தெலுங்கின் இளம் ஹீரோவான நாக சைதன்யா, தமிழில் நேரடியாக அறிமுகமாக ஆசைப்பட்டார். அதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்ற படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கில் தயாராகி வெளிவந்த படம். இரண்டு மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது.
தமிழில் பிரம்மாண்டமான இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் நடிக்க மற்ற மொழி ஹீரோக்களும் ஆசைப்படுவர். அப்படி ஆசைப்பட்டு அவரது இயக்கத்தில் 'கேம் சேஞ்ஜர்' படத்தில் நடிக்க வந்தார் ராம் சரண். பொங்கல் வெளியீடாக வந்த படம் மற்ற சீனியர் ஹீரோக்களின் படங்களுடன் போட்டி போட முடியாமல் வசூலில் பின்தங்கி நஷ்டம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இப்படியான தொடர் தோல்விகளால், வரும் காலங்களில் தெலுங்கு ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படவே மாட்டார்கள்.