வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
தமிழில் 'ஆளவந்தான், சாது' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீணா டான்டன். தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது ரவீணாவின் மகள் ரஷா ததானியும் அம்மாவைப் போலவே நடிகையாக மாறியுள்ளார். அவரது முதல் படமான 'ஆசாத்' சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவீணாவிடம் அவரது மகளும் நடிகையானது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது பேசிய ரவீணா, “என்னுடைய காலத்தில் நான் படங்களில் நடிக்க துவங்கியதிலிருந்து உதட்டு முத்தம் கொடுக்கக் கூடாது என்பதை ஒரு உறுதியான பாலிசியாகவே வைத்திருந்தேன். ஒருமுறை ஒரு படப்பிடிப்பில் திடீரென அந்த படத்தின் ஹீரோ எதிர்பாராத விதமாக என்னை முத்தமிட்டு விட்டார். நான் உடனடியாக அங்கிருந்து என்னுடைய அறைக்கு ஓடிச்சென்று வாஷ்பேசினில் வாமிட் பண்ணினேன்.
பலமுறை மவுத்வாஷ் போட்டு வாய் கொப்பளித்தும் என்னால் அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதை எல்லாம் பார்த்த அந்த சம்பந்தப்பட்ட நடிகரே வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் என் மகளிடம் இதுபோன்று நீயும் இருக்க வேண்டும் என நான் சொல்ல மாட்டேன். என்ன செய்ய வேண்டும் என தீர்மானித்துக் கொள்வது அவளது விருப்பம். அவள் போக்கில் விட்டு விடுவேன்” என்று கூறியுள்ளார்.