ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜூ. இன்னொருவர் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் தான். இதில் பிரேமலு படத்திற்கு முன்பே அனஸ்வரா ராஜன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். பிரேமலு வெற்றிக்குப் பிறகுதான் மமிதா பைஜூ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரர் ராஜன் கூறும்போது, “நானும் மமிதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ் நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.