விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் |
நடிகர் விஷால் நடிப்பில் கட்நத சில ஆண்டுகளில் தொடர்ந்து வெளியான படங்கள் சறுக்கலை சந்திக்க, கடந்த 2023ல் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்து உருவாகி சில பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்த மத கஜ ராஜா திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் விஷால் முன்பை விட உற்சாகமாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அதற்கு முன்பாகவே இயக்குனர் கவுதம் மேனன் டைரக்ஷனில் தான் ஒரு படம் நடிக இருப்பதாக நேற்றைய மத கஜராஜா நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக கூறினார் விஷால். அது மட்டுமல்ல இயக்குனர் அஜய் ஞானமுத்து டைரக்ஷனிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஏற்கனவே இயக்குநர் சுந்தர்.சியுடன் ஆம்பள, ஆக்ஷ்ன் ஆகிய படங்களில் நடித்த விஷால் தற்போது மத கஜ ராஜாவும் வெளியாகி வெற்றி பெற்று இருப்பதால் அடுத்து சுந்தர்.சி டைரக்ஷனில் அவர் எப்போது அழைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கவுதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி, காளிதாஸ் ஜெயராம் நடித்து வரும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு அவர் விஷால் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.