பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் | பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் |
மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலமாக நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சவ்பின் சாஹிர். தொடர்ந்து துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக துல்கர் சல்மானின் படங்களில் அதிகம் இவர் நடித்துள்ளார். அது மட்டுமல்ல அடிப்படையில் இவர் உதவி இயக்குனராக இருந்தவர்.
பின்னர் துல்கர் சல்மானை வைத்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பறவ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சவ்பின் சாஹிர். அதன் பிறகு ஒரு குணச்சித்திர நடிகராக, கதையின் நாயகனாக பிஸியான இவர் கடந்த வருத்தம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் நண்பர்கள் கூட்டத்தில் நண்பரை காப்பாற்றும் பிரதான நபராக நடித்து மொழி தாண்டி ரசிகர்களை வசீகரித்தார்.
அதன் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது கூலி படத்தில் நடித்து வரும் இவர் இதனைத் தொடர்ந்து, தான் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப இருப்பதாகவும் கூலி படப்பிடிப்பு முடிவடைந்ததும் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது இரண்டாவது படத்திலும் துல்கர் சல்மான் தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதையும் இவர் உறுதி செய்துள்ளார்.