சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா | ரிலீசுக்கு தயாராகும் டேனியல் பாலாஜியின் கடைசி படம் | கதை நாயகன் ஆனார் ராமர் | 'விடாமுயற்சி'யில் ஒரு வாரத்தில் எனது கேரக்டரை மாற்றினார் இயக்குனர் : ரெஜினா | ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை: கவுண்டமணி | பிளாஷ்பேக் : கங்கை அமரன் இசை சாம்ராஜ்யம் நடத்திய 'வாழ்வே மாயம்' |
கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் கடுமையான காட்டுத்தீ திடீரென பரவியது. இதில் பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தை நேரில் இருந்து பார்த்ததுடன் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியும் உள்ளார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் பாலிவுட்டில் மட்டுமே அதிக அளவில் படங்கள் நடித்திருந்தாலும் மணிரத்தனத்தின் 'உயிரே' போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்தான். சமீபத்தில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று இருந்த போது தான் காட்டுத்தீ பரவலை நேரில் பார்த்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாங்கள் இருந்த பகுதிக்கு மிக அருகில்தான் காட்டுத்தீ மளமள என பரவியபோது, நாளை என்கிற ஒரு நாளை மீண்டும் பார்ப்பேனா என்று என் மனதிற்குள் அச்சம் தோன்றியது. நண்பர்களும் அருகில் இருந்த குடும்பத்தினரும் சாம்பலின் தாக்கம், புகை ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடினர். குழந்தைகளும் பெரியவர்களும் ரொம்பவே பாதிக்கப்பட்டனர். காற்றும் கூட அமைதி கொள்ளாமல் இதை தீவிரப்படுத்தியது. இந்த நிகழ்வை பார்த்து நான் ரொம்பவே மனம் நொறுங்கிப் போனேன். அதேசமயம் நாங்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.