தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதர் அஜித் - நடன இயக்குனர் கல்யாண் | யுவன் சங்கர் ராஜாவை புகழும் சிவகார்த்திகேயன் | மீண்டும் வீர தீர சூரன் படத்திற்கு சிக்கலாக நிற்கும் விடாமுயற்சி | பொங்கல் வெளியீட்டில் பின் வாங்கிய படங்கள் | சினிமா காதலி : சந்தோஷத்தில் சபிதா | மார்கோ 2வில் வில்லனாக விக்ரம்? | காதலர் தினத்தில் வெளியாகும் மம்முட்டியின் ஆக்ஷன் படம் | ஷங்கர் படங்களை 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன் - பவன் கல்யாண் | ஆசைமுகம், வாலி, லவ் டுடே : ஞாயிறு திரைப்படங்கள் | இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் |
2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்த அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் தள்ளிப்போனது. அதனால், புதிதாக பத்து படங்கள் வரை தற்போது பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் அனைத்திற்கும் எப்படி தியேட்டர்கள் கிடைக்கும். தமிழகத்தில் இருப்பதே 1000 தியேட்டர்கள்தான். இவற்றில் எந்தப் படம் வெளிவரும், எந்தப் படம் தள்ளிப் போகும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
தற்போது இந்தப் போட்டியில் புதிதாக 'மத கஜ ராஜா' படம் இணைந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைப்பில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம். 2012ல் ஆரம்பமான இந்தப் படம் 2013ம் ஆண்டே முடிவடைந்தது.
2013ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது விஷால் நடித்த மற்றொரு படமான 'சமர்' படம் வெளியானதால் 'மத கஜ ராஜா' வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் 2013 குடியரசு தினத்தில் வெளியாக திட்டமிட்டார்கள்.
ஆனால், 'மத கஜ ராஜா' படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் தயாரிப்பான மணிரத்னத்தின் 'கடல்' படம் 2013 பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி படு தோல்வியைத் தழுவியது. அந்தப் படத்தின் நஷ்டத்தை 'மத கஜ ராஜா' வெளியீட்டின் போது சரி செய்ய வேண்டும் என வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு அதே வருடத்தில் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டார்கள். தொடர்ந்து சில வழக்குகள், பிரச்னைகள் என படத்தின் வெளியீடு அவ்வப்போது அறிவிக்கப்பட்டு தள்ளிக் கொண்டே வந்தது.
கடைசியாக 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த முறையாவது படம் வெளிவந்துவிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.