வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
அமரன் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23-வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு என்ற இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் சுதா இயக்கத்தில் அவர் நடிக்கும் புறநானூறு படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி இடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதேபடத்தில் வில்லனாக நடிக்க விஷாலிடத்திலும் பேச்சுவார்த்தை நடப்பதாக இன்னொரு தகவலும் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அது குறித்து விஷாலிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், சிவகார்த்திகேயன் படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. அவர் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார் விஷால்.