மார்கோ 2வில் வில்லனாக விக்ரம்? | காதலர் தினத்தில் வெளியாகும் மம்முட்டியின் ஆக்ஷன் படம் | ஷங்கர் படங்களை 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன் - பவன் கல்யாண் | ஆசைமுகம், வாலி, லவ் டுடே : ஞாயிறு திரைப்படங்கள் | இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி | இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி | ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள் |
90களில் இளைஞர்களின் மனதைக் கிறங்கடித்த கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. முதன்முதலாக ரசிகர்களால் கோவில் கட்டப்படும் அளவிற்கு பிரசித்தி பெற்றவர். தற்போது ஒரு பக்கம் பட தயாரிப்பு, இன்னொரு பக்கம் அரசியல் பயணம் என தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கும் குஷ்பு, தான் தயாரிக்கும் படங்களில் ஒரு காட்சி அல்லது ஒரு பாடலுக்காக இடம் பெறுவதும் மேலும் நட்புக்காக அவ்வப்போது ஒரு சில படங்களிலும் தலைகாட்டி வருகிறார்.
அப்படி வாரிசு படத்தில் அவர் விஜய்யுடன் நடித்திருந்தும் படம் வெளியான போது அவர் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்பது பெரும் அதிர்ச்சியை தந்தது. அதேபோல அண்ணாத்த படத்தில் அவர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்ச நேரமே வந்து போகும் ஒரு காமெடி முறைப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து ஏமாற்றம் அளித்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து கூறும்போது, “அண்ணாத்த படத்தில் நடித்தது இப்போது நினைத்து பார்த்தால் ஏமாற்றம் அளிக்கிறது. நான் அதில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது அதில் ரஜினிக்கு ஜோடியாக நான் தான் நடிக்கிறேன் என்பது போன்று தான் இருந்தது. அப்போது நயன்தாரா கதாபாத்திரம் எல்லாம் இல்லை. போகப்போக நான் நடிக்கும் காட்சிகளை வைத்து பார்த்த போது ரஜினிக்கு அந்த படத்தில் ஜோடியே இல்லை திருமணம் ஆகாமல் இருப்பார் என்பது போன்று தான் கதை நகர்ந்தது. ஆனால் பின்னால் தான் நயன்தாரா கதாபாத்திரம் வலிய கொண்டு வந்து திணிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதேபோல நான் நடித்த காட்சிகள் படப்பிடிப்பின் போது நன்றாக இருந்தன. ஆனால் டப்பிங் பேசும்போது பார்த்தால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது” என்று கூறியுள்ளார்.