சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேசிப்பாயா'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருவதால் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து பேசினார்.
அப்போது மேடையில் யுவன் சங்கர் ராஜா குறித்து சிவா கூறுகையில், " யுவன் சங்கர் ராஜாவை பொறுத்தவரையில் பெரிய நடிகர்கள், சின்ன நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் பெரிய படம், சின்ன படம் என எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. அவருக்கு அந்த படத்தின் கதை பிடித்திருந்தால் அதற்கு ஹிட் பாடல்களை தர வேண்டும் என நினைக்ககூடியவர். இந்த குணம் அவரின் தந்தை இளையராஜாவிடம் இருந்து வந்திருக்கும் என நினைக்கிறேன். யுவன் சங்கர் ராஜா திரை பயணத்தை எடுத்து பார்த்தால் எல்லா படத்தையும் ஒரே மாதிரி தான் கையாண்டிருக்கிறார் என்பது புரியும். அதனால் தான் அவரை ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்' என்பதை கடந்து ' பியாண்ட் டைம்' என அழைக்க வேண்டும்" என தெரிவித்தார்.




