அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

நடிகராக, பாடகராக, பாடலாசிரியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு படம் தயாரிப்பதிலும் ஆர்வம் உண்டு. இதற்கு முன்பு தான் நடித்த படங்கள் தவிர, கனா, கொட்டுக்காளி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா உட்பட பல படங்களை தயாரித்து இருக்கிறார். இதில் சில படங்கள் அவருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தன. சில படங்கள் அதை செய்யவில்லை. ஆனாலும் நல்ல கதைகள் வந்தால், தான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதிக்கிற பணத்தை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்.
அந்தவகையில் ராதிகா நடிக்கும் தாய்கிழவி படத்தை, பேஷன் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்துள்ளார். அவரே பாடகர் என்பதால் இந்த படத்தில் பெற்ற ஒரு கிராமத்து பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் இன்று பிப்ரவரி 5ம் தேதி மாலை பர்ஸ்ட் சிங்கிளாக ரிலீஸ் ஆகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்த இந்த பாடல் ‛தாய் கிழவி வர்றா ஒதுங்கிக்க...' என்ற தொடங்குகிறதாம். இந்த பாடல் படத்தின் நாயகியான ராதிகாவை பற்றிய பாடல்.
75 வயதான பவுனுதாயி கேரக்டரில் ராதிகா நடித்து இருக்கிறார். காக்கா முட்டை மணிகண்டன் உதவியாளரான சிவகுமார் முருகேசன் இயக்கும் படம் இது. தாய் கிழவி என்ற வார்த்தை தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் பிரபலம் ஆனது. அந்த படத்தில் அவரே இந்த பாடலை எழுதி பாடியிருப்பார். பாடலில் நித்யா மேனன் நடித்தார்.