தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி |

மலையாளத்தில் சில நாட்களுக்கு முன்பு இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அதே சமயம் அதிக அளவில் வன்முறை காட்சிகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது ஹிந்தியில் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதை தொடர்ந்து கொரிய நாட்டிலும் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஹனீப் அதேனி என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி, ஆர்யா இருவரையும் வைத்து தி கிரேட் பாதர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். அதன் பிறகு நடிகர் நிவின்பாலியை வைத்து இரண்டு படம் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மார்கோ திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. வழக்கமாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு உடனே அடிபட துவங்கிவிடும். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சு தற்போது பரவத் துவங்கிய நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரமும் இது போன்ற சவாலான கதாபாத்திரங்களை விரும்பி நடிப்பவர் என்பதால் ஒருவேளை இது உறுதியாக கூட வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.