கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக காஜல் அகர்வால் | கேம் சேஞ்சர் பட நிகழ்ச்சியை கியாரா அத்வானி தவிர்த்தது ஏன்? | ஏப்., 10ல் ‛குட் பேட் அக்லி' ரிலீஸ் | இந்திய சினிமா வரலாற்றில் 'புஷ்பா 2' புதிய சாதனை | பிளாஷ்பேக்: தொலைபேசியில் சொல்லி பதிவு செய்யப்பட்ட கண்ணதாசனின் காவியப் பாடல் | அவசரப்பட்டு திருமணம் செய்யவில்லை - சாக்ஷி அகர்வால் விளக்கம் | மகனுடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்! | மீண்டும் ரஜினியை இயக்குவேன்! ஷங்கர் வெளியிட்ட தகவல் | தண்டேல் படத்திற்காக நாகசைதன்யாவுடன் பக்தி பாடலுக்கு நடனமாடிய சாய் பல்லவி! | நயன்தாராவுக்கு 'சந்திரமுகி' பட தரப்பு நோட்டீஸ் அனுப்பியதா? |
அரை சதம் படங்களை நெருங்கி கொண்டிருந்தாலும், சினிமாவில் பிடித்த எதிர்பார்த்தபடியான கேரக்டர் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருப்பதாக கூறுகிறார் நடிகையும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுமான சபிதாராய். ஆனாலும் சர்தார், 1947 ஆகஸ்ட் 16 படங்கள் தன்னை நடிகையாக நிலைநிறுத்தியிருப்பதாகவும் சந்தோஷப்படும் அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...
பொள்ளாச்சி தான் சொந்த ஊர். அம்மா 'பொள்ளாச்சி' பிரேமா. அவர் பெயரை சொன்னாலே சினிமா வட்டாரங்களில் தெரியும். முரட்டுக்காளை, ராணுவவீரன் உள்ளிட்ட பல ஏ.வி.எம்., நிறுவன படங்களில் நடித்திருக்கிறார். இதனால் சினிமா ஆசை என் சிறிய வயதிலேயே பற்றிக் கொண்டது. நான் சிறுமியாக இருந்த போதே அப்பா மறைந்துவிட்டார். அம்மா தான் என்னையும், அக்கா கவிதாவையும் வளர்த்து ஆளாக்கினார்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அம்மா அறிமுகத்தால் பல படங்களில் சிறுமியாக நடித்திருக்கிறேன். பிளஸ் டூ முடித்ததும் சினிமா, சீரியல் தொடர்பான ஐடியா கிடைத்தது. ஊமை விழிகள் தயாரிப்பாளர் ஆபாவாணன் தயாரித்த டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் என் நடிப்பை கவனித்த பல சீரியல் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் நடிக்க வைத்தனர். கோலங்கள் முதல் வாணி ராணி வரை பல சீரியல்களில் நடித்தேன். 2017ல் இரும்புத்திரை படத்தில் வாய்ப்பு கிட்டியது. அப்படத்தின் மூலம் இயக்குனர் மித்ரன், நடிகர் விஷால் அறிமுகம் கிடைத்தது. பல படங்களில் காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், யோகிபாபு, சூரிக்கு ஜோடியாக கன்னிராசி, லீசா, பிரின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
சர்தார் படத்தில் எஸ்.ஐ., கேரக்டர் நாயகனுடன் போலீசாக படம் முழுவதும் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 1947 ஆகஸ்ட் 16 படத்தில் ஊர்வசியுடன் நடித்தேன். இந்த இரண்டு படங்களும் எனக்கு பிரேக் கொடுத்தன.
சினிமாவின் காதலி நான். 48 படங்களை நெருங்கி கொண்டிருந்தாலும் என் மனதுக்கு பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை. சமீபத்தில் லக்கிபாஸ்கர் படத்தில் ராம்கி நடித்த அந்தோணி கேரக்டர் படம் முழுக்க வரவில்லை என்றாலும் படத்தில் திருப்புமுனையாகிறது. அதுபோல படத்தில் ஐந்து நிமிடங்கள் வந்தாலும் கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் நடிக்க தயார்.
இத்துறையில் இந்தளவுக்கு வளர என் கணவர், நான்கு வயது குழந்தை, அம்மா உறுதுணையாக இருக்கின்றனர். ஒரு புத்தாண்டு முதல் நாள் மாமனிதன் படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட்டில் நான் நடித்தேன். என் நடிப்பை இயக்குனர் சீனுராமசாமி, விஜய்சேதுபதி உள்ளிட்ட படப்பிடிப்பில் இருந்த அனைவருமே பாராட்டியதை வாழ்க்கையில் மறக்க முடியாது. டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிகிறேன். வாரிசு, ரெடி உள்ளிட்ட பல படங்களில் பலருக்கு குரல் கொடுத்திருக்கிறேன்.
நான் முதுகலை பொது நிர்வாகம் படித்திருப்பதையறிந்த மறைந்த இயக்குனர் மனோபாலா என்னை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நியமன செயற்குழு உறுப்பினராக நியமிக்க செயலாளர் விஷால், துணை தலைவர் முருகனிடம் சிபாரிசு செய்தார். நடித்து கொண்டே சங்கத்திலும் செயல்பட்டு வருகிறேன். சங்க செயல்பாடுகளை சொல்ல வேண்டும் என்றால் விரைவில் சங்க கட்டடம் திறக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய விஷயம். கடைசி வரை நடிகை மனோரமா போல சினிமா சாப்பாட்டை சாப்பிடும் வகையில் நடித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
இவ்வாறு தெரிவித்தார்.