சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே | மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்? | தீபிகா படுகோனேவுக்கு எதிரான ரீல்ஸ்க்கு லைக் செய்தாரா தமன்னா : இன்ஸ்டா மீது புகார் | கணவர் மற்றும் மகன்களுடன் நெதர்லாந்துக்கு ஜாலி டிரிப் சென்ற நயன்தாரா |
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த வருடம் ராமர் கோவில் புதிதாகக் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அயோத்தியில் தங்களுக்கென தனி இடத்தை வாங்க பல பிரபலங்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
நடிகர் அமிதாப்பச்சன் சமீபத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடி மனை ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அயோத்தியில் அவர் வாங்கியுள்ள நான்காவது இடம் இது என்கிறார்கள். இதற்கு முன்பு 10 ஆயிரம் சதுர அடி இடத்தை 14.5 கோடிக்கும், 5 ஆயிரம் சதுர அடி இடத்தை 4.5 கோடிக்கும், அவர்களது குடும்ப டிரஸ்ட் சார்பாக 54 ஆயிரம் சதுர அடி இடம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ரியல் எஸ்டேட்டில் அமிதாப்பச்சன் எப்போதுமே அதிகமாக முதலீடு செய்வார். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மும்பையில் பல கோடி மதிப்புள்ள சில வீடுகள் உள்ளன.